இரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்!

நிம்மதியான உறக்கம்
நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்
பெண்களுக்கு அதிக உற்சாகம்
தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.
மாயமாகும் கலோரிகள்
30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும். வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கற்பனைத் திறன்
தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும்.படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன?. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.
செக்ஸ் அடிமை என்பது உண்மையல்ல… ஆய்வில் தகவல்
செக்ஸ் அடிமை என்ற வார்த்தையே உண்மையானதல்ல…. அது கூடுதலான உணர்வுதான் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இயல்பை விட கூடுதலாக செக்ஸ் பற்றி நினைப்பவர்களும், பேசுபவர்களும் இருக்கின்றனர். சிலர் செக்ஸுக்கு அடிமையாகி விட்டதாக நினைக்கின்றனர்.
உண்மையில் அதீதமான செக்ஸ் உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர செக்ஸுக்கு அடிமையானவர்களாக அவர்கள் இருக்க முடியாது என்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இந்த சர்வேயை எடுத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும் சோதனைக்குட்படுத்தினர். இவர்கள் அதிக அளவில் செக்ஸுக்கு அடிமையானவர்கள் என்று கூறப்பட்டவர்கள் ஆவர்
உடல் ரீதியான கோளாறு
இவர்களிடம் செக்ஸ் பழக்க வழக்கங்கள், செக்ஸ் விருப்பம், செக்ஸ் கட்டாயம், செக்ஸ் நடத்தையால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், உடல் ரீதியான கோளாறு காரணமாக இந்த செக்ஸ் அடிமை என்பது இருக்க முடியாது என்று கண்டறியப்பட்டது.
கூடுதலான உணர்வு
மாறாக, அதீதமான, வழக்கமான அளவை விட அதிக அளவிலான செக்ஸ் விருப்பங்கள், ஆர்வங்கள் இருக்க முடியுமே தவிர அதை அடிமை என்று சொல்ல முடியாது என்று இவர்கள் சொல்கிறார்கள்.
மூளையின் அதிர்வுகள்
இவர்கள் கொடுத்த பதிலை வைத்து இயல்பான செக்ஸ் விருப்பங்களைக் கொண்டவர்களின் நிலையுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது. மேலும் இரு தரப்பினரின் நரம்பியல் நிலையும், இஇஜி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் மூளையின் அதிர்வுகள் கணக்கிடப்பட்டன.

நார்மல்தான்
இந்த ஆய்வின்போது செக்ஸ் அடிமைகள் என்று கூறப்பட்டவர்களிடம் அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று கண்டுபிடிக்கப்ட்டதாம். அதாவது சாதாரண செக்ஸ் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு இருப்பது போலத்தான் இவர்களின் மூளை அதிர்வுகளும் இருந்ததாம்.
இந்த ஆய்வின்போது செக்ஸ் அடிமைகள் என்று கூறப்பட்டவர்களிடம் அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று கண்டுபிடிக்கப்ட்டதாம். அதாவது சாதாரண செக்ஸ் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு இருப்பது போலத்தான் இவர்களின் மூளை அதிர்வுகளும் இருந்ததாம்.
செக்ஸ் அடிமை கிடையாது
அதேசமயம், இயல்பானவர்களை விட செக்ஸ் விருப்பம் அதிகம் உள்ளவர்களாக மட்டுமே இவர்கள் இருந்துள்ளனர். இதை வைத்து, உண்மையில் செக்ஸ் அடிமை என்பதெல்லாம் கிடையாது. மாறாக, செக்ஸ் விருப்பங்கள், ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதுதான் உண்மை என்ற முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனராம்.
அதேசமயம், இயல்பானவர்களை விட செக்ஸ் விருப்பம் அதிகம் உள்ளவர்களாக மட்டுமே இவர்கள் இருந்துள்ளனர். இதை வைத்து, உண்மையில் செக்ஸ் அடிமை என்பதெல்லாம் கிடையாது. மாறாக, செக்ஸ் விருப்பங்கள், ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதுதான் உண்மை என்ற முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனராம்.
No comments:
Post a Comment